மீண்டும் சிவாஜி பட தலைப்புடன் வெளியாகவுள்ள தனுஷின் திரைப்படம், என்ன பெயர் தெரியுமா ?
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் வரிசையாக சில முக்கிய இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. அதில் தனுஷுடன் இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் நடித்து முடித்த பாலிவுட் திரைப்படம் தான் அத்ராங்கி ரே, இப்படத்தில் அவருடன் அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்திற்கு கலாட்டா கல்யாணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் தனுஷ் படத்திற்கு கர்ணன் என்ற சிவாஜி படத்தின் பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, அப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது.