வாட்சப் ஸ்டேட்டஸ் சர்ச்சை பற்றி தாடி பாலாஜி விளக்கம்.. டாட்டூ போட்டுட்டா பதவி கிடைச்சிடுமா
பிரபல காமெடியனும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்தவருமான தாடி பாலாஜி தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து அரசியல் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.
விஜய்யின் போட்டோவை நெஞ்சில் டாட்டூவாக அவர் குத்தி இருந்தார். அந்த வீடியோவும் வைரலாகி இருந்தது.
சமீபத்தில் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். புதிதாக கட்சியில் சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பதவி வழங்கப்பட்டு இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
அது பற்றி தாடி பாலாஜி தனது வாட்சப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட மீம் வைரல் ஆனது. தன்னை தற்குறி என்றும் அவர் அந்த மீமில் குறிப்பிட்டு இருந்தார். அது இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.
விளக்கம்
அந்த சர்ச்சை பற்றி தற்போது தாடி பாலாஜி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "அந்த மீம் யாரோ அனுப்பினார்கள். அதை ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிட்டேன். அது இவ்வளவு பெரிதாகும் என நான் எதிர்பார்க்கவில்லை".
டாட்டூ போட்டுவிட்டால் பதவி கிடைத்துவிடுமா என ட்ரோல் செய்கிறார்கள். நான் பதவிக்காக எதையும் செய்யவில்லை. தொண்டனாகவே இருந்தாலும் சரி தான். எனக்கு என்ன தர வேண்டும் என விஜய்க்கு தெரியும்.
எனக்கு கூடிய விரைவில் விஜய்யிடம் இருந்து அழைப்பு வரும், அதில் இருந்து நான் வேறு லெவலில் அரசியலில் ஓடப்போகிறேன் என தாடி பாலாஜி கூறி இருக்கிறார். வீடியோ இதோ.

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
