எங்க கைவெச்சு தள்ளினான் தெரியுமா.. பிக்பாஸ் அஸீம் பற்றி தனலட்சுமியிடம் அதிர்ச்சி புகார்
பொம்மை டாஸ்க்
போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனை வர வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸில் சில கேம்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது நடந்து வரும் பொம்மை டாஸ்கில் தற்போது அஸீம் எல்லைமீறி மீண்டும் பேசி இருக்கிறார். அதனால் இந்த வாரமும் அவருக்கு கமல் ஒரு பெரிய அட்வைஸ் கொடுக்கவேண்டி இருக்கும் என தெரிகிறது.
பொம்மை டாஸ்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில போட்டியாளர்கள் கீழே விழுந்தனர். அப்போது ஷெரினாவுக்கு தலையில் அடிபட்டது.
அஸீம் vs தனலட்சுமி
ஷெரினாவை தள்ளிவிட்டது தனலட்சுமி தான் என அஸீம் குற்றம்சாட்டினார். அதற்காக அவர் வழக்கம்போல அவரை மோசமாக திட்ட தொடங்கிவிட்டார். "நீயெல்லாம் ஒரு பொண்ணா. இப்ப தள்ளிவிடுற" என அவர் கேட்டார்.
நான் தள்ளிவிடவில்லை, நானும் தான் கீழே விழுந்தேன். நான் தள்ளிவிட்டதை வீடியோவில் நிரூபித்தால் நான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லை என்றால் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தனலட்சுமி கூறினார்.
மேலும் அவர் அஸீம் தன்னை பார்த்து கேட்ட கேள்விகள் பற்றி அவர் கண்ணீர் விட்டார்.
அது மட்டுமின்றி நாளைய ப்ரோமோவில் அசீம் தன்னை தகாத இடத்தில் தொட்டு தள்ளியதாக தனலட்சுமி புகார் கூறி இருக்கிறார்.
அதன் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
#Vikraman vs #Azeem ???
— Raja (@whyrajawhy) October 26, 2022
Tomorrow’s episode.
Expect more drama tomorrow. #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/B280EujZrr