ரீ ரிலீசான தனுஷ் 3 திரைப்படம்.. சூப்பர்ஸ்டார் படத்தை விட அதிக வசூல்
3 திரைப்படம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் 3.
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் வரவேற்பை பெறவில்லை. இப்படம் தனுஷின் திரைவாழ்க்கையில் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் 3 படத்தின் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
தமிழில் பெரிதாக ஹிட்டாகாத இப்படம் தெலுங்கில் ரீ ரிலீஸாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
அதன் வீடியோக்கள் கூட சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கில் ரீ ரிலீஸாகியுள்ள இப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான கரன மொகுடு ரீ ரீலிஸான போது குவித்த வசூலை விட 3 திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்முலம் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் தெலுங்கில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
