தனுஷ் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பாதிப்பு.. நிறுத்தச்சொல்லி போலீசில் புகார்
தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. கலவையான விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலும் குவித்து இருக்கிறது.
இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 51வது படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜை உடன் தொடங்கியது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஷூட்டிங்.. பக்தர்கள் பாதிப்பு
திருப்பதியில் இந்த படத்தின் ஷூட்டிங் இன்று நடந்து இருக்கிறது. திருப்பதி மலையின் அடிவாரத்தில் இருக்கும் அலிபிரி என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்த நிலையில் அதற்காக சாலையில் போக்குவரத்துக்கு வேறு பாதைக்கு மாற்றப்பட்டு இருந்தது.
இதனால் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தை திருப்பி விட பவுன்சர்களை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. எதிர்ப்புகள் வந்ததால் போலீசார் போக்குவரத்தை அதன் பின் மாற்றி பழைய பாதையிலேயே அனுமதித்து இருக்கின்றனர். இது தொடர்பாக தற்போது போலீசில் பலர் புகார் கூறி இருக்கின்றனர்.
மேலும் சில தினங்களுக்கு திருப்பதியில் தனுஷ் 51 படக்குழுவினர் ஷூட்டிங் செய்ய இருக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri