இட்லி கடை டைட்டில் ஏன்? Hatersக்கு பதிலடி.. தனுஷ் அதிரடி Speech
நடிகர் தனுஷின் ரசிகர்கள் எல்லோரும் தற்போது இட்லி கடை படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு அரங்கில் நடைபெற்றது.
மேடையில் பேசிய தனுஷ் இந்த படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்ததற்கான காரணத்தையும் கூறி இருக்கிறார்.
ஏன் இந்த டைட்டில்
"சின்ன வயதில் எனக்கு தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் கையில் காசு இல்லை. "
"காலையில் வயலில் பூப்பறிக்கும் வேலைக்கு சென்றால் 2 ரூபாய் அல்லது 2.5 ருபாய் சம்பளமாக கொடுப்பார்கள். அந்த பணத்தை கொண்டு சென்று 4 அல்லது 5 இட்லி வரும், அதை சாப்பிடுவேன்."
"அப்படி உழைத்து சாப்பிட்ட டேஸ்ட், இப்போது பெரிய பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போதும் கிடைக்கவில்லை. அந்த இட்லி கடைக்கு இப்போது போனால்.. அதை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. உண்மையான கதையை, உண்மையான கதாபாத்திரங்களை வைத்து தான் தற்போது இட்லி கடை படம் எடுத்து இருக்கிறேன்" என தனுஷ் கூறினார்.
Haters பற்றி..
மேலும் தனது haters பற்றி பேசிய தனுஷ்.. "Haters என ஒரு concept இல்லை. அப்படி யாருமே இல்லை. எல்லாருமே எல்லா படமும் பார்ப்பார்கள். யாரு hatersனு எனக்கு சொல்லுங்க. அப்படி யாருமே கிடையாது."
"ஒரு குறிப்பிட்ட 30 பேர் தாங்கள் பிழைப்பதற்காகவோ, வேறு எதற்காகவோ, 300 ஐடியை வைத்துக்கொண்டு பரப்புவது தான் Hate. அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அந்த 30 பேரும் போய் படம் பார்ப்பார்கள்."
இவ்வாறு தனுஷ் கூறி இருக்கிறார்.