நயன்தாரா அதை பற்றி கவலைப்பட மாட்டாங்க.. தனுஷ் இப்படி கூறினாரா
தனுஷ் - நயன்தாரா
முன்னணி ஹீரோவான நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், முதல் முறையாக யாரடி நீ மோகினி படத்தின் மூலமாக தான் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.
இப்படத்தின் மூலம் இவர்களுடைய ஜோடிக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், இப்படத்திற்கு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடலுக்கு மட்டுமே இருவரும் இணைந்து நடனமாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பேச்சு
இந்த நிலையில், யாரடி நீ மோகினி படம் வந்த சமயத்தில், நடிகை நயன்தாராவை பற்றி தனுஷ் பேசிய விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதில் "நயன்தாராவிற்கு ரொம்ப கோபம் வரும், ஆனால் தங்கமான மனசு. தனக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்வாங்க. பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க. ரொம்ப கடுமையா உழைப்பாங்க" என கூறினார்.