தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் First லுக் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தனது திரைவாழ்க்கையில் இதுவரை பல நல்ல படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில நல்ல படங்களையும் நடிக்காமல் தவறவிட்டுள்ளார்.
விஜய் நிராகரித்த கதை
அப்படி விஜய் நிராகரித்த கதைகளில் ஒன்று தான் அனேகன். ஆம், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த அனேகன் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது தளபதி விஜய் தானாம்.
ஆனால், கதையை கேட்டு, இப்போது என்ன இப்படத்தில் நடிக்கமுடியாது என்று விஜய் கூறிவிட்டாராம். இதன்பின், இந்த கதையை தனுஷிடம் கூறி ஓகே செய்துள்ளார் கே.வி. ஆனந்த்.

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
