விடுதலை படத்திற்காக மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த தனுஷ்.. ஆனால்..!
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் வெற்றிமாறனுடன் மீண்டும் தனுஷ் இணைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஆனால், இந்த முறை ஹீரோவாக இல்லாமல், இப்படத்தில் பாடகராக வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளாராம் தனுஷ்.
ஆம், இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி பெற்று, நடிகர் தனுஷ் இப்பாடலை பாடி உள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.