திருமணம் செல்லாது! நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி..
தனுஷ் - ஐஸ்வர்யா
கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்து கேட்ட ஜோடி
தங்களுடைய பிரிவு குறித்து அறிவித்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி மனு தாக்கல் செய்துள்ளார்களாம்.
2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டு முறையிட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
