மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி.. வெறித்தனமான அப்டேட்
தனுஷ் - அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவராக உலா வருகிறார்.
தனுஷ் - அனிருத் கூட்டணிக்கென்று சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன் பின், இவர்கள் கூட்டணியில் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றது.
வெறித்தனமான அப்டேட்
இதன் பின், இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது, ஒரு அதிரடியான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, தனுஷின் 56-வது படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.