திருமண நிகழ்ச்சியில் சந்தித்து கட்டியணைத்துக்கொண்ட தனுஷ் சிம்பு... வைரலாகும் போட்டோஸ்

Yathrika
in பிரபலங்கள்Report this article
தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு போட்டி இருக்கும். பிரபலங்களுக்குள் சண்டை உள்ளதோ இல்லையோ, அவர்களது ரசிகர்கள் எப்போதுமே தங்களது நாயகனின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து சண்டை போடுவார்கள்.
அப்படி எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி என ஒவ்வொரு காலமும் ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் கூட்டம் சண்டையில் இருப்பார்கள்.
அதிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒரு காலத்தில் எப்படியெல்லாம் சண்டையில் ஈடுபட்டார்கள் என்பது நமக்கே நன்றாக தெரியும்.
வைரல் போட்டோ
அப்படி ரசிகர்களால் போட்டியாக பார்க்கப்பட்டவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு.
ஆனால் இவர்கள் எப்போதுமே தங்களை நண்பர்களாக தான் காட்டி வந்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக செம வைரலாகி வருகிறது.


