நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் படித்தது இந்த பள்ளியில் தானாம், வெளியான சூப்பர் தகவல்

Dhanush Vijay Sethupathy Childhood school
By Balakumar Mar 24, 2021 12:32 PM GMT
Report

நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இரண்டு நடிப்பு அசுரர்களின் நடிப்பில் அசுரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது.

மேலும் சமீபத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த இரு நடிகர்கள் குறித்து நாம் பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தாய் சத்ய எம்.ஜி.ஆர் பள்ளியில் படித்துள்ளனர். அந்த பள்ளியின் நிருபர் மற்றும் நடிகருமான தீபன் தேசிய விருது வென்ற நடிகர்களை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "ஒரே ஆண்டில் தேசிய விருதை வென்ற எங்கள் மாணவர்களான தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி நினனத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த பள்ளியை எம்.ஜி.ஆர் நிறுவினார். பாடசாலையின் அனைத்து மாணவர்களும் தேசிய விருதை வெல்ல விரும்புகிறார்கள்" என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US