அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட நடிகர் தனுஷ்.. வைரலாகும் வீடியோ
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் இன்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா மற்றும் விளையாற்று துறை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் அங்கு முதல் வரிசையில் கிரிக்கெட் வீரர் சச்சின் உடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களும் வைரல் ஆனது.
கூட்டத்தில் சிக்கிய தனுஷ்
நடிகர் தனுஷ் அயோத்திக்கு செல்ல நேற்றே சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பினார். அயோத்தியில் அவர் கோவிலுக்குள் செல்லும் போது அதிகம் கூட்டம் இருந்ததால் அவர் நெரிசலில் சிக்கிக்கொண்டார்.
போலீசார் தான் அவரை சுற்றி பாதுகாப்பு அளித்து அழைத்து சென்று இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.