விவாகரத்து செய்திக்கு பிறகு தனது மகன்களுடன் முதன்முறையாக வெளியே வந்த தனுஷ்- எங்கே பாருங்க
சினிமா பிரபலங்களில் கடந்த வருடத்தில் இருந்து ஒரு சோகமான விஷயம் தொடர்ந்து நடக்கிறது. அதாவது பிரபலங்கள் தங்களது வாழ்க்கை துணையை விவாகரத்து செய்வது தான்.
விவாகரத்து செய்த பிரபலங்கள்
முதலில் நடிகை சமந்தா விஷயம் தான் வைரலாக பேசப்பட்டது. அவர் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து பெற அது ரசிகர்களுக்கு பெறும் சோகத்தை கொடுத்திருந்தது.
பின் அடுத்தடுத்து இசையமைப்பாளர் டி.இமான், தனுஷ், பாலா போன்றோரும் விவாகரத்து செய்தி வெளியிட்டார்கள்.
ஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சில தகவல் வந்த நிலையில் அது நடக்காது என்பதை அண்மையில் ஒரு போஸ்ட் மூலம் கூறிவிட்டார் தனுஷ்.
ராக் வித் ராஜா ஷோ
அண்மையில் சென்னையில் Rock With Raja என்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகர் தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தனது மகன்களுடன் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக், கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?