நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம், அவர் அணிந்துள்ள உடையின் விலை மட்டும் இத்தனை அயிரமா?
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் The Gray Man, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது.
இத்தனை நாட்களாக தனுஷ் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், இன்று அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி காலையில் பரவி வந்தன.
இதற்கிடையே தற்போது தனுஷ் அணிந்திருந்த உடை குறித்து தான் இணையத்தில் பரவி வருகிறது. நீல நிற பர்பெர்ரி ஹூடியுடன் போஸ் கொடுதிருந்தார், அந்த ஹூடியின் விலை சுமார் ரூ.67,000 இருக்குமாம்.
