டாக்டர்ஸ் திரைப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருந்தாரா! First லுக் போஸ்டர் இதோ
தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அடுத்த மாதத்திற்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டாக்டர்ஸ்
தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் 'டாக்டர்ஸ்'. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சோனியா அகர்வால் நடிக்கவிருந்துள்ளார்.
இப்படத்திற்கான போஸ்டர் போட்டோஷூட் நடந்துள்ள நிலையில், படம் ட்ராப் ஆகியுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படத்தின் போஸ்டர்கள்..



பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
