தனது மகன்களுக்காக மேடையில் எமோஷ்னலாக பாடிய தனுஷ்- வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வரவேற்கப்படாமல் கிண்டலடிக்கப்பட்ட ஒரு நடிகர். அந்த மோசமான விமர்சனங்களால் துவண்டு போகாமல் போராடி இப்போது சிறந்த நடிகராக தேசிய விருது எல்லாம் வாங்கியிருக்கிறார்.
அடுத்தடுத்த படங்கள்
தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பிஸியாக அடுத்தடுத்து எல்லா மொழிகளிலும் படங்கள் கமிட்டாகி றடிக்கிறார். கடைசியாக மாறன் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்து The Gray Man, திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாதி, Sir போன்ற படங்கள் வர இருக்கின்றன.
Rock With Raja
இளையராஜா சில வருடங்களாக மிகவும் ஆக்டீவாக இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் Rock With Raja என்ற கச்சேரி நடந்தது, அதில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் வந்து கலந்துகொண்டார்.
அப்போது மேடை ஏறிய தனுஷ் தனது மகன்களுக்காக இளையராஜாவிடம் அனுமதி வாங்கி ஒரு எமோஷ்னல் பாடல் பாடினார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Wat a moment ?? @dhanushkraja ??? @ilaiyaraaja ❤️#RockWithRaaja pic.twitter.com/MY4IzqIKih
— கொடுக்காபுலி (@lingaa_twits) March 18, 2022