சோகமான சூழ்நிலைக்கு இடையே தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் உருவாகி வருகிறது.
இதனிடையே நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் தனுஷ். ஆம் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.
இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல நட்சத்திரங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சோகமான சூழ்நிலைக்கு இடையே தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படி ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த புஷ்பா பட இயக்குனர் சுகுமாருடன் தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu