பிரபல தனுஷ் பட இசையமைப்பாளராக கடுப்பேற்றிய தனுஷ் ரசிகர்கள் - காரணம் இதுதானா
தனுஷ் இயக்கிய 'ப பாண்டி', சதுரங்க வேட்டை, ஜோக்கர், ராட்சசி, தாராள பிரபு ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஷான் ரோல்டன்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஷான் ரோல்டன், " என்னிடமிருந்து ஒரு பெரிய அறிவிப்பு விரைவில்," என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவிற்கு தனுஷ் ரசிகர்கள் சிலர் “மீண்டும் இந்த பக்கம் வந்துடாத” என கமெண்ட் செய்திருந்தனர். 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்கு அவர் சரியாக இசையமைக்கவில்லை என்பதையும் அதற்கான காரணமாக சொல்லியிருந்தனர்.அதே சமயம் சில ரசிகர்களும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை பாராட்டியிருந்தனர்.
இன்று அந்த கமெண்ட்டுகளுக்கு பதிலளிக்கும் விதத்தில், “வேலையில்லா பட்டதாரி 2' படத்தை முழுவதுமாக முடிக்க எனக்கு 3 நாட்கள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது. எந்த தரத்திற்கும் அது ஒரு நியாமில்லாத காலக்கெடு. தனுஷ் சார் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார். ஆனால், சில இதயமற்ற தனுஷ் ரசிகர்கள் அதை பற்றி இன்னும் பேசி கொண்டிருக்கிறார்கள் ".
மேலும் " பல அன்பான தனுஷ் ரசிகர்கள் எனக்கு ஆதரவையும், அன்பையும் தவிர வேறு எதையும் காட்டாதவர்களாக இருக்கிறார்கள்.எதிர்காலத்தில் அவருடன் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றுவேன். உங்கள் காதுகளுக்கு மகிழ்ச்சியான இசையை தருவேன். சரியான நேரம் வரட்டும்," என்று கூறியிருந்தார்.