மீண்டும் சர்ச்சையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் .. தனுஷ் தந்தை அறிவித்த முக்கிய நடவடிக்கை
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
முக்கிய நடவடிக்கை
இந்நிலையில், நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களிடம் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்ற 'பஞ்சு மிட்டாய், 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'தூதுவளை இலை அரைச்சு' என நான் எழுதிய மூன்று பாடல்களும் பிரச்சனையில் தான் இருக்கின்றன.
புதிய இயக்குநர்களுக்கு புதிதாக சிந்திக்கவும், நல்ல பாடல்கள் எடுக்கவும் முடியவில்லை. இப்போதைய தலைமுறையில் இளையராஜா, தேவா போன்ற கிரியேட்டர்கள் இல்லை.
ஆனால் அதற்கான அனுமதி கேட்டு பழைய பாடல்களை பயன்படுத்தலாம். அப்படி யாருமே அனுமதி கேட்பதில்லை. எனவே எனது பாடல் தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.