நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு.. தனுஷ் எடுத்த அதிரடி முடிவு

Kathick
in பிரபலங்கள்Report this article
நயன்தாரா, தனுஷ் சர்ச்சை
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிக்கை வெளிவந்த நிலையில், பெரும் சர்ச்சை உருவானது.
தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த, படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் NOC தரவில்லை என கூறி, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், தனுஷை கடுமையாக சாடியும் இருந்தார் நயன்தாரா.
தனுஷ் அனுமதிக்க கொடுக்காத நிலையிலும், தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்கு
இந்த நிலையில், தனது தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை, தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தனுஷ் தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்தது.. நைட் ஃபுல்லா தூக்கமில்ல - 30 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த ரஜினி IBC Tamilnadu
