விஜய் ரூட்டை அப்படியே பின்பற்றும் தனுஷ்.. அரசியல் என்ட்ரிக்கு எடுத்த முதல் படி
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அவர் அரசியலில் ஜெயித்த பிறகு மற்ற பல நடிகர்களும் அரசியல் கனவு காண தொடங்கியிருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், விஷால், தனுஷ் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனக்கு விஜய் பார்த்து பொறாமை இல்லை, நான் வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகி இருப்பேன் என ரஜினியும் பேட்டி கொடுத்தார்.

விஜய் ரூட்டில் தனுஷ்
விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதற்குப் பிறகு அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே ரூட்டை தற்போது தனுஷ் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.
தன்னுடைய ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக அதில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் படி நிர்வாகிகளுக்கு தெரிவித்திருக்கிறாராம் அவர். தமிழ் நாடு முழுவதும் 40 மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்றங்களில் தலைவர்களையும் இதற்காக நியமித்திருக்கிறார் தனுஷ்.
அரசியலில் நுழைய இப்போதே தனுஷ் பணிகளை தொடங்கி விட்டதால், 2031 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri