ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா
தளபதி கச்சேரி
வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

தளபதி கச்சேரி, இசை திருவிழாவுடன் ஜனநாயகன் இசை வெளியீடு நடப்பதால், இந்த நிகழ்ச்சியை நேரில் காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடக்கும் இந்த விழாவில் சுமார் 85,500 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.

மேலும் இந்த விழாவில் விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்திய பின்னணி பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
கலந்துகொள்ளும் முன்னணி நடிகர்
இந்த நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான தனுஷ் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் இதில் கலந்துக்கொள்கிறார்களாம்.

நடந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏற்கனவே மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.