தனுஷ் - வினோத் இணையும் படத்தின் கதை இப்படி தான் இருக்குமாம்.. வெறித்தனமா இருக்கே
அ. வினோத்
துணிவு படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் அ. வினோத் யாரை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வரவில்லை.
ஆனால், கமல் ஹாசனை வைத்து தான் இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது கமல் ஹாசன் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார் என்றும், தன்னுடைய அடுத்த படத்தை மணி ரத்தம் இயக்கவேண்டும் என முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதன்முலம் அ. வினோத் அடுத்ததாக கமலுடன் இணையவில்லை என தெரிகிறது. இதனால் தனுஷ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார் அ. வினோத். ஆம், ஏற்கனவே தனுஷிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார்.
தனுஷ் - வினோத் படம்
சமீபத்தில் கூட சந்தூரங்க வேட்டை போன்ற கதைக்களத்தில் ஒரு படத்தை அ. வினோத்திடம் இருந்து எப்போது நாங்கள் எதிர்பார்க்கலாம் என்று கேள்வி எழுந்தது.

இதற்க்கு பதிலளித்த அ. வினோத், 'தனுஷிடம் அப்படியொரு கதையை தான் கூறியிருக்கிறேன்' என கூறியுள்ளார். இதன்முலம் தனுஷ் மற்றும் அ. வினோத் இணையும் படம் கண்டிப்பாக வெறித்தனமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.
குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா