விவாகரத்துக்கு பின் தனுஷ் போட்ட மகிழ்ச்சியான பதிவு! யாருடன் இருக்கிறார் பாருங்க
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் திடீரென விவாகாரத்தை அறிவித்து தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தனர். அவர்கள் பல தருணங்களில் மீண்டும் நிகழ்ச்சிகளில் சந்தித்து கொண்டாலும் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்று தான் தெரிகிறது.
தனுஷ் தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அதே போல ஐஸ்வர்யாவும் முஸாஃபிர் என்ற பாடலை இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் உடன் எடுத்த போட்டோவை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட அது வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது தனது நான்கு நாய்கள் உடன் நேரத்தை செலவிடும் போட்டோவை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.
"A long due reunion !! So happy to be with my boys again" என மகிழ்ச்சியாக தனுஷ் பதிவிட்டு இருக்கிறார்.