விஜய் சேதுபதி தொடர்ந்து போண்டா மணிக்கு பண உதவி செய்த நடிகர் தனுஷ்- எவ்வளவு தெரியுமா?
போண்டா மணி
கடந்த 6 மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தவர் நடிகர் போண்டா மணி.
அண்மையில் ஒரு புதிய படப்பிடித்தில் சாக்கடை தண்ணீர் உடம்புக்குள் போனதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுதிணறி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மேல் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் போண்டா மணிக்கு பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். நுரையீரல், சிறுநீரகம் என பல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார்.

பண உதவி
பணம் இல்லாமல் கஷ்டப்படுவதை கேட்ட பலரும் அவருக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளதாக தகவல் வந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷும் போண்டா மணிக்கு ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளாராம்.
அரசு தரப்பிலும் அவருக்கு உதவி செய்வதாக உறுதி கூறியுள்ளார்கள், நடிகர் வடிவேலுவும் அவருக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

பிக்பாஸில் நுழைந்துள்ள விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் நாயகி- முடிவுக்கு வந்த தொடர்