சம்பளத்தை உயர்த்திய தனுஷ்! இத்தனை கோடி கேட்கிறாரா

By Parthiban.A Sep 03, 2022 05:30 PM GMT
Report

தனுஷ் தன் அடுத்த படம் சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடித்து இருந்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து இருக்கிறது.

அந்த படத்திற்காக தனுஷ் 15 கோடி ருபாய் சம்பளமாக வாங்கினார் என முன்பே தகவல் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  

சம்பளத்தை உயர்த்திய தனுஷ்! இத்தனை கோடி கேட்கிறாரா | Dhanush Hikes His Salary Thiruchitrambalam Hit

சம்பளத்தை உயர்த்திய தனுஷ்

இந்நிலையில் தற்போது தனுஷ் அவரது அடுத்த படத்திற்காக சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் அடுத்து நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதமே தொடங்குவதாக இருந்த நிலையில், தற்போது வரை தொடங்கவில்லை. தனுஷ் தன் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். அவர் 30 கோடி கேட்பதால் தான் தயாரிப்பு நிறுவனமும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் தான் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

சம்பளத்தை உயர்த்திய தனுஷ்! இத்தனை கோடி கேட்கிறாரா | Dhanush Hikes His Salary Thiruchitrambalam Hit

எனக்கும் கமல் சாருக்கும் உள்ள ஒற்றுமை, சிம்பு எமோஷனல் ஸ்பீச் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US