நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள தனுஷின் இட்லி கடை திரைப்படம்... 2 நாள் வசூல் விவரம்
இட்லி கடை
நடிகர் தனுஷ் இப்போது அதிகம் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை தொடர்ந்து அவர் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் தான் இட்லி கடை.
தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை.
கடந்த அக்டோபர் 1ம் தேதி வெளியான இப்படம் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ. 13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.