தனுஷின் இட்லி கடை படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்.. வைரலாகும் போட்டோ
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பின் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வந்தார்.
அதோடு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பவர் பாண்டி, ராயன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை படங்கள் தயாராகி வருகிறது.
இட்லி கடை
தனுஷ் நடிக்கும் 52வது படமாக உருவாகி வருகிறது இட்லி கடை தான். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் அருண்விஜய் குத்து சண்டை வீரராக இருக்கிறார், அவருக்கு உதவு செய்யும் நபராக தனுஷ் அவர் பக்கத்தில் நிற்கிறார்.
போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் இது எதுமாதிரியான கதை என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.