மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான தனுஷின் இட்லி கடை.. அடேங்கப்பா இத்தனை கோடியா
இட்லி கடை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் மும்முரமாக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.
ஆம், தனுஷ் இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு இட்லி கடை என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.
வெளிநாட்டு உரிமை
இந்த நிலையில், இட்லி கடை படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ. 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இதற்கு முன் வெளிவந்த ராயன் படம் ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆகையால், அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருந்த இப்படத்தை ரூ. 12 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This Video