ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதானாம் - லீக்கான கதைக்களம், ரசிகர்கள் ஷாக்
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் பேட்ட படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.
தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதான் என்று கூறி கதை சுருக்கும் வெளியாகியுள்ளது.
கதைக்களம் :
சுருளி {தனுஷ்} தனது ஹோட்டல் கடையில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் அங்கு நடக்கும் தவறான செயலை தட்டி கேட்க ஒரே ராத்திரியில் ஊர்முழுக்க ரௌடியாக பிரபலமாகிறாராம்.
அதேநேரத்தில் லண்டனில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ இருவர் கேங்குக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதனை முடிவு கட்ட ஜோஜு ஜார்ஜ் தனது ஆட்களிடம் சொல்லி பல நாடுகளில் இருந்து கை தேர்ந்த ரௌடிகளை தேர்ந்தெடுத்து அழைத்து வருமாறு உத்தரவுவிடுகிறார்.
இதன் காரணமாகவே அவர்கள் தனுஷை தேர்ந்தெடுக்க, தனுஷ் வெளிநாடு செல்கிறார்.
அங்கு சென்ற சில நாட்களில் தன் டீம் பக்கம் தவறுகள் இருக்கு, எதிர்தரப்பே சரி என்பதை உணர்ந்து உண்மை நிலவரம் அறிய வர வில்லன் டீம் முலுவைத்தையும் அளித்து ஹீரோவாகிறாராம் சுருளி.
இது தான் படத்தில் கதை என்று கூறி வருகின்றனர். ஆனால் படம் வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மையென்று.

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
