'கேப்டன் மில்லர்': மூன்று ரோலில் நடிக்கிறாரா தனுஷ்? உண்மை இதுதான்
நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கும் படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் பீரியட் படத்திற்கு "கேப்டன் மில்லர்" என பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முந்தைய காலகட்டமான 1930கள் மற்றும் 40களில் நடப்பது போல கதை இருக்குமாம். ராக்கி மற்றும் சாணி காயிதம் படத்தினை இயக்கிய அருண் மாதேஷ்வரனின் அடுத்த படம் இது என்பதால் இந்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு மூன்று கதாபாத்திரங்கள் என நேற்று தகவல் பரவியது. அதுபற்றி இயக்குனர் தற்போது பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் வாழ்க்கையில் 15 வருடங்களில் நடக்கும் சம்பவங்கள் தான் கதையாக இருக்கும். இந்த கதை எழுதும்போது பாதியில் தனுஷ் இதற்கு சரியாக இருப்பார் என முடிவு செய்தேன். 2018ல் இந்த படத்தின் கதையை அவரிடம் கூறினேன். ஆனால் 2019ல் தான் படம் உறுதியானது.
"தனுஷின் கதாபாத்திரம் பெயர் தான் மில்லர். ஆனால் மில்லர் கதாபாத்திரத்திற்கு படத்தில் மேலும் இரண்டு பெயர்கள் இருக்கும்" என இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் தனுஷ் மூன்று ரோல்களில் நடிக்கவில்லை, மூன்று விதமான கெட்டப்களில் மட்டுமே நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri