இணையும் ரஜினிகாந்த் தனுஷ் கூட்டணி.. வெளிவந்த அட்டகாசமான தகவல்
ஜெயிலர்
கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் நல்ல வசூல் குவித்து தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கிய முந்தைய படம் பீஸ்ட் சில எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு நல்ல கம்பேக்காக இருந்தது.

ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.
கூலி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ஜெயிலர் 2 -ல் இணைவார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது
அனிருத் இசையமைப்பில், நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த் முதல் முறையாக கூட்டணி அமைத்த இப்படம் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.
இணையும் ரஜினிகாந்த் தனுஷ்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு புது அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 -ல் நெல்சன் திலிப் குமார் ரஜினிகாந்துடன் இணைத்து இந்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri