ப்ரீ புக்கிங்கில் இதுவரை குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குபேரா
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் குபேரா.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
வருகிற 20ம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், குபேரா திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் இப்படம் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இது ரிலீசுக்கு முன் இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான வரவேற்புதான் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri