நடிகர் தனுஷை கவர்ந்த ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டர், தனுஷ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியாக நடிகராக விளங்குகிறார், ஏன்னென்றால் அந்த அளவிற்கு இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் லைன் அப் உள்ளது.
மேலும் தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படமான ஆதராகி ரே வில் நடித்து வருகிறார், இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமாரும் அவருடன் நடிக்கின்றார்.
அப்படத்தை முடித்து விட்டு தனுஷ் எந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்று இயக்குனர் செல்வராகவன் தனது ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ளதாக அறிவித்து இருந்தார்.
மேலும் அப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் பேன் மேட் போஸ்டர்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது அதில் ஒரு போஸ்ட்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "வாவ்" என கூறியுள்ளார்.
Wow !! AO2 pic.twitter.com/ccEfjxVYjh
— Dhanush (@dhanushkraja) January 2, 2021