தனுஷ் மேனேஜர் போலீசில் புகார்.. சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் சர்ச்சைக்கு வெளியிட்ட அறிக்கை
சீரியல் நடிகை மான்யா ஆனந்த் அளித்த பேட்டி சமீபத்தில் வைரல் ஆனது. தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரில் ஒருவர் அணுகி பட வாய்ப்புக்காக கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) செய்ய வேண்டும் என கூறினார் என தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவின் ஒரு பகுதி மட்டும் வெட்டி சிலர் இணையத்தில் உலவ விட, அது பெரிய சர்ச்சை ஆனது. தனுஷ் மற்றும் அவர் மேனேஜருக்கு எதிராக நடிகை குற்றம் சாட்டியது போல செய்திகள் வர தொடங்கியது.
அதற்கு விளக்கம் கொடுத்த நடிகை,'நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அந்த நபர் போலியாக கூட இருக்கலாம். தனுஷ் பெயரை இப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறி இருந்தேன். முழு பேட்டியை பாருங்கள்' என கூறி இருந்தார்.

தனுஷ் மேனேஜர் அறிக்கை
இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி தனுஷின் மேனேஜர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன் ஜனவரி 2024, பிப்ரவரி 2025 சொன்னது போல என் பெயரில் அல்லது wunderbar நிறுவனத்தின் பெயரில் வரும் casting call அழைப்புகள் போலியானவை.
இந்த இரண்டு நம்பர்களும் என்னுடையது இல்லை. என் போட்டோவுடன் தவறாக பயன்படுத்துகிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.