இப்படி ஒரு கதையா? தனுஷ் மாரி செல்வராஜ் இணையும் படத்தின் அப்டேட்
தனுஷ் அடுத்து கர்ணன் பட இயக்குனர் மாரி செலவராஜ் உடன் மீண்டும் கூட்டணி சேர இருக்கிறார். அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வந்தது. இதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் பிசியாக இருக்கிறார் மாரி செல்வராஜ். அந்த படத்தினை முடித்தபிறகு அவரது அடுத்த படம் துருவ் விக்ரம் உடன் தான். அதனை முடித்தபிறகு தான் தனுஷ் படத்துக்கு அவர் வர இருக்கிறார்.

தனுஷ் பட கதை
இந்நிலையில் தனுஷ் படத்தின் கதை எப்படி இருக்கும் என மாரி செல்வராஜ் தெரிவித்து இருக்கிறார். இது historical drama படம் எனவும், தனது கெரியரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் எனவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. மேலும் இந்த படம் 2024ல் தான் தொடங்கும் என்பதால் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியது தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு இந்த நடிகர் விலகிவிட்டாரா?- ரசிகர்கள் ஷாக்