சரத்குமார் மீது வழக்கு தொடுத்த தனுஷின் அம்மா! வெடித்த பிரச்சனை
நடிகர் சரத்குமார் கோலிவுட்டில் குணச்சித்திர நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தீவிர பிரச்சாரம் செய்தார். மனைவி ராதிகா ஜெயிக்க வேண்டும் என கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். ஆனால் இறுதியில் தோல்வி தான் கிடைத்தது.
இது ஒருபுறம் இருக்க தற்போது சரத்குமாருக்கு இன்னொரு புது சிக்கல் வந்திருக்கிறது.
தனுஷ் அம்மா வழக்கு
நடிகர் சரத்குமாருக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் தரைதளத்தில் வீடு இருக்கிறது. அதே அபார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு வீட்டில் தான் நடிகர் தனுஷின் பெற்றோரும் வசித்து வருகிறார்கள்.
அந்த அபார்ட்மெண்ட்டில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சொந்தமான மாடி பகுதியை சரத்குமார் ஆக்கிரமித்து அதை வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக தனுஷின் அம்மா உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். இது பற்றி சரத்குமார் மற்றும் மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
You May Like This Video

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
