பிரம்மாண்டமாக வெளியான காந்தாரா Chapter 1, தனுஷின் இட்லி கடை தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. இவ்வளவா?
இட்லி கடை
தனுஷின் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியுள்ள படம்தான் இட்லி கடை. இப்படத்தை இயக்கி ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது 8 நாளில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 8 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இட்லி கடை ரூ. 46 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
காந்தாரா Chapter 1
இட்லி கடை படத்தை தொடர்ந்து காந்தாரா Chapter 1 படத்தின் வசூல் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரிக்க ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் ஜெயராம், குல்ஷன், ராகேஷ் பூஜாரி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். வசூலில் மாஸ் காட்டி வரும் இப்படம் 7 நாளில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் காந்தாரா ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.