தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்
எஸ்.எஸ். ஸ்டான்லி
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
பின் தனுஷை வைத்து புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தை இயக்கினார். தொடர்ந்து மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களையும் இயக்கினார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.
மரணம்
இந்த நிலையில், இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி இன்று காலை உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவர் வயது 57. இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
எஸ்.எஸ். ஸ்டான்லியின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
