தனுஷை நம்பி 100 கோடி முதலீடு செய்துள்ள முன்னணி நிறுவனம்.. லாபம் கிடைக்குமா
நடிகர் தனுஷ்
தனுஷ் தற்போது உலகளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்து சூப்பர்ஹிட்டாது.
இதை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி படம் வெளியாகவுள்ளது. சில விஷயங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. கடைசியாக இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
100 கோடி முதலீடு
சமீபத்தில் நடிகர் தனுஷின் 50வது படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டி நடுவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்குள் தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட தனுஷ் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், தனுஷின் 50வது திரைப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளதாம் சன் பிக்சர்ஸ். இதுவரை வெளிவந்த தனுஷின் திரைப்படங்கலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவே என்கின்றனர்.
மேலும் இப்படத்திலிருந்து சன் பிக்சர்ஸுக்கு லாபம் கிடைக்குமா என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
9 நாட்களில் அதிகம் வசூல் செய்ததது வாரிசு-ஆ, துணிவு-வா? முதலிடம் யாருக்கு