தனுஷின் படத்தில் கதாநாயகியாக இவரா - இதுவரை ஒரு படம் மட்டும் தானே நடித்திருக்கிறார்
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் உலகளவில் படங்கள் நடிக்க துவங்கியுள்ளார் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.
இதனையடுத்து இவர் நடிப்பில் தொடர்ந்து 8 படங்களுக்கும் மேல் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு படத்தை மாரி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தாயாருக்கிறதாம்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் இதற்கு முன் பட்டாஸ் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறாராம்.
இவர் இதற்கு முன் தெலுங்கு வெளியாகி வெற்றியடைந்த உப்பெண்ணா படத்தில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.