மூன்று படங்கள் ஓடிடி, மூன்று படங்கள் தியேட்டர்.. நடிகர் தனுஷின் அடுத்த அதிரடி
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். இவருடைய நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு முன் மாறன் மற்றும் அத்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் திரைப்படமான 'the grey man' என மூன்று திரைப்படங்களை நடித்து முடித்திருந்தார் தனுஷ்.
இந்த மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனுஷின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், நானே வருவேன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமும் தியேட்டரில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.
இதனை வைத்து பார்க்கும் பொழுது, மூன்று திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யிலும், மற்ற மூன்று படங்களும் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri