ரசிகர்கள் எதிர்பார்த்த தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
தனுஷ்
இளைஞர்களை கவரும் வகையில் காதல் கதைக்களத்தில் உருவான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான தனுஷ் இயக்கியிருந்தார்.
பா. பாண்டி மற்றும் ராயன் படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படமாகும் இது. இப்படத்தின் மூலம் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் மார்ச் 21ந் தேதி OTT தளத்தில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.