ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
தனுஷ்
நடிகர் மற்றும் இயக்குநராக தனுஷ் சமீபகாலமாக மிகவும் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்கத்தில் பா. பாண்டி வெளிவந்ததை தொடர்ந்து அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பின் ராயன் வெளியானது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். இப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
இவருடைய இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக இட்லி கடை வெளியாகியுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த 1ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

OTT ரிலீஸ்
இந்நிலையில், இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri