ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் குபேரா OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
தனுஷ்
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குபேரா.
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கு சினிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
OTT ரிலீஸ்
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
