தனுஷ் ரசிகர்களுக்கு ‘டி54’ படக்குழு விடுத்த வேண்டுகோள்.. என்ன? வைரல் பதிவு!
தனுஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியானது. அடுத்து தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் D54 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வைரல் பதிவு!
இந்நிலையில், 'டி54’படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு தனுஷ் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதோ,
We request our "D"ear fans to support us by not sharing any footage from the sets of #D54. Your cooperation means everything!
— Vels Film International (@VelsFilmIntl) November 5, 2025