டி54 படப்பிடிப்பு பணியில் பிஸியாக வலம் வரும் தனுஷ்!.. வெளியான ஷூட்டிங் ஸ்டில்
தனுஷ்
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
தனுஷ் அடுத்ததாக தனது 54வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
ஷூட்டிங் ஸ்டில்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ,
Straight from the sets of #D54 - Shoot in progress! @dhanushkraja 🔥 pic.twitter.com/9qbUYo28xV
— Vels Film International (@VelsFilmIntl) July 29, 2025

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
