பிரம்மாண்ட படத்துடன் மோதும் தனுஷின் 'நானே வருவேன்'?
நடிகர் தனுஷ் தற்போது கைவசம் நான்கு படங்கள் வைத்து இருக்கிறார். ஹாலிவுட்டில் கிரே மேன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படம் வரும் செப்டம்பர் 30ம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அதே தேதியில் தான் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். சமீபத்தில் ரிலீஸ் ஆன டீஸர் 20 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவை பொன்னியின் செல்வன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, அதனுடன் தனுஷ் படம் ரிலீஸ் ஆகிறது என்கிற தகவல் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
